பொது அறிவு கேள்வி 115
கேள்வி: பின்வருவனவற்றில் எது ‘வளைகுடா ஒத்துழைப்பு அவை’யின் உறுப்பினர் அல்ல?
விருப்பங்கள்:
A) ஈரான்
B) சவூதி அரேபியா
C) ஓமன்
D) குவைத்
Show Answer
விடை:
சரியான விடை: A
தீர்வு:
- விள. [அ] ஈரான் வளைகுடா ஒத்துழைப்பு அவையின் உறுப்பினர் அல்ல. ஈரானில் பெரும்பான்மையான மக்கள் பாரசீகர்கள்; அரபு மக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். அரபு வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு அவை என அறியப்படும் வளைகுடா ஒத்துழைப்பு அவை என்பது ஈராக் தவிர்த்து, பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பிராந்திய அரசிடை அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாகும். இதன் உறுப்பு நாடுகள் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். வளைகுடா ஒத்துழைப்பு அவை 25 மே 1981 அன்று அபுதாபியில் நிறுவப்பட்டது. வளைகுடா ஒத்துழைப்பு அவை நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தம் 11 நவம்பர் 1981 அன்று அபுதாபியில் கையெழுத்திடப்பட்டது. இந்த நாடுகள் பெரும்பாலும் ‘GCC நாடுகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.